சிவ ஞானி.ஜி.நாராயண் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். இவர் இளமை
காலம் முதலே இறைபக்தியில் ஈடுபாடு கொண்டு சமய ஆன்றோர்கள் பலருடன் தொடர்பு
கொண்டிருந்தார். வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்
பணிபுரிந்து கொண்டே இந்து சமய விழிப்புணர்வுக்காக சிவ சபா என்னும் இந்த நிறுவனத்தை
துவக்கினார்.
சிவ சபாவில் மாலை நேர வகுப்பு ஆரம்பித்து பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்து
தர்மம், யோகா, தியானம், ஆன்மிக கல்வி முறைகளை கற்பித்தார்.
1998 முதல் 2004 வரை தொடர்ச்சியாக சென்னையில் பல பகுதிகளில் உள்ள கோவில்களிலும்,
மெரினா கடற்கரையில் உள்ள சீரணி அரங்கத்திலும் சிவ நாம ஜப கூட்டங்கள் நடத்தினார்.
2000, 2001, 2002 ஆகிய மூன்று வருடங்களும் தொடர்ச்சியாக 120 நாட்கள் தமிழ் நாட்டில் 18
மாவட்டங்களில் சிவலிங்கம் ரதயாத்திரையாக கொண்டு சென்று, மக்கள் கைகளால்
அபிஷேகம் செய்ய வைத்தார். 600 கோடி சிவ நாமத்தை மக்களை எழுத வைத்து, சேகரித்து,
சென்னை ஒட்டியம்பாக்கம் சிவன் கோவில் நிலவரையில் பதிய வைத்து அதன் மேல்
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது
நாராயண் ஜி அவர்களின் காலத்திற்கு பிறகு அன்னை ஞானேஸ்வரி அவர்களால் சிவ சபா
தற்போது வழிநடத்தப்படுகிறது. அன்னை ஞானேஸ்வரி அவர்கள் கிரி பரம்பரையில்
சன்னியாசம் பெற்றவர். அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தில் இணைந்து பாரத நதிகளின்
தூய்மை, வழிபாடு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பணிகளில் தன்னை
ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.